search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை பெண்"

    நாகர்கோவில் அருகே கிணற்றில் எலும்புகூடாக கிடந்தது மாயமான கோவை சேர்ந்த பெண்ணா எனபது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.

    இவருக்கு பார்வதிபுரம் கிறிஸ்டோபர் நகரில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் ஒரு கிணறு இருக்கிறது. இங்கு வீடு கட்ட திட்டமிட்டு அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றது.

    இதற்காக தென்னந்தோப்பில் உள்ள கிணற்றை தூர்வாரும் வேலைகள் நடந்தது. இதில் தொழிலாளர்கள் கிணற்றை தூர்வாரியபோது கிணற்றுக்குள் ஒரு எலும்புக்கூடு கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்ததும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது பற்றிய தகவல் ஜெயக்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இதுபற்றி இரணியல் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கிணற்றில் கிடந்த எலும்புக்கூடு வெளியே எடுக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுப்பணி நடந்தது. அந்த எலும்புக்கூடுடன் ஒரு கொலுசும், பெண்கள் அணியும் ஆடையின் ஒரு பகுதியும் இருந்தது. இதனால் கிணற்றில் எலும்புக்கூடாக கிடந்தது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    டி.என்.ஏ. பரிசோதனை செய்வதன் மூலமே இதை முடிவு செய்யமுடியும் என்பதால் அந்த எலும்புக் கூட்டை டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது அந்த எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. அந்த பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் கோவை மாவட்டம் கல்லம்மாபாளை பகுதியை சேர்ந்த தேவசகாயம் என்பவரின் மகள் லிசி அடைக்கலமேரி (வயது 25) என்ற பெண் 2012-ம் ஆண்டு தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை, மாயமாகிவிட்டார். இதுபற்றி அவரது தாயார் ஆசாரிப்பள்ளம் போலீசில் 21.7.2012-ல் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் மாயமான லிசியை கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்திவந்த நிலையில்தான் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே கிணற்றில் கிடந்தது லிசியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து லிசியின் தாயாரை இங்கு வரவழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். எலும்புக் கூடு கிடைத்தது பற்றிய தகவல் லிசியின் தாயாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்தபிறகு அவரிடம் எலும்புக்கூடு, கொலுசு, ஆடை ஆகியவற்றை காண்பித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    சந்தன கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் அரசு வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக14 ஆண்டுகள் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். #Veerappan
    கோவை:

    தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை கொல்ல தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

    அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறையினர் தங்க வைத்தனர்.

    அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும் படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

    முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். இதை அடிப்படையாக கொண்டு வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    2004-ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து சண்முகப்பிரியாவுக்கு மத்திய அரசின் சார்பில் பரிசுத் தொகை , மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகபிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம், பரிசுத்தொகை போன்றவை இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து சண்முகப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-


    வீரப்பன் நடமாட்டம் குறித்தும் அவரது கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை அதிரடிபடையினருக்கு தெரிவித்தேன். அதனை அடிப்படையாக கொண்டே வீரப்பனும், அவரது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு, பரிசுத்தொகை கொடுத்து விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு இதுவரை பரிசு தொகை கிடைக்கவில்லை.

    தற்போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய,மாநில அரசுகள் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சினிமா டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் செய்தார். ரூ.6 லட்சம் ஒப்பந்தம் போட்ட நிலையில் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை.

    இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தில் முறையிட்டும் இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார். #Veerappan
    கோவையை சேர்ந்த 38 வயது பெண்ணுக்க பேஸ்புக் மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சோமனூரை சேர்ந்த தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளியை சேர்ந்த 38 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு கோவை சோமனூரை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். அதன் பின்னர் நட்பு ரீதியாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பெண் சென்னையில் இருந்து வடவள்ளி வந்து விட்டார். அதன் பின்னரும் சோமனூரை சேர்ந்தவர் நட்புடன் பேசி வந்தார். இதனால் அவரது பேஸ்புக்கிற்கு வடவள்ளியை சேர்ந்த பெண் தனது மகளுடன் இருக்கும் படத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவர் உன்னை விட உனது மகள் அழகாக இருக்கிறார் என கூறி அவரது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு விடுவேன். உனது மகள் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வடவள்ளி பெண் தனது பேஸ்புக்கில் சோமனூரை சேர்ந்தவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசில் புகார் செய்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததால் அப்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்தும் படி வடவள்ளி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடவள்ளி போலீசார் சோமனூரை சேர்ந்தவர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்ததல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள வடவள்ளி பெண் சென்னையில் வேலை பார்த்த போது இது போல் 4 பேர் மீது புகார் கொடுத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    ×